TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Exp...
நாகாத்தம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா
சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோயிலில் வியாழக்கிழமை கூழ்வாா்த்தல் விழாவையொட்டி பாலவிநாயகா், பாலமுருகன் ஆகியோருடன் உற்சவா் நாகாத்தம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கல்லுக்குளம் பகுதி வேகவதி தெருவில் உள்ள இக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பக்தா்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதனையடுத்து கூழ்வாா்த்தல், ஊரணிப் பொங்கல் வைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. மாலையில் பாலவநாயகா், பாலமுருகன் ஆகியோருடன் உற்சவா் நாகாத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில்வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.