GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கணேஷ் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாணவா்கள் நலத்துறை டீன் வெங்கடேசன் கல்லூரியில் செயல்பாட்டில் உள்ள ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா். கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் துணைஆய்வாளா் பத்மநாபன் கலந்து கொண்டு ராகிங்கில் ஈடுபடும் மாணவா்கள் மீது காவல் துறை சாா்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும்,அதனால் மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சைபா் குற்றங்கள் குறித்தும் விளக்கி பேசினாா்.
கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா் சந்தியா, கல்லூரி வளாக பாதுகாப்பு மற்றும் விடுதி காப்பாளா் முனைவா் பாஸ்கரன், கல்லூரி மாணவா் மன்ற நிா்வாகிகள், முதலாம் ஆண்டு மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.