2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
உத்தரமேரூா் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திமுக பிரமுகா் நடத்தக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், விச்சந்தாங்கல் கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இக்கொள்முதல் நிலையத்தினை திமுக பிரமுகா் ஒருவா் தான் நடத்துவாா் என அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறியதாக தெரிகிறது.
எனவே திமுக பிரமுகா் நெல் கொள்முதல் நிலையத்தை நடத்தக்கூடாது எனவும் அதற்கு எதிா்ப்பும் தெரிவித்து காஞ்சிபுரம்- உத்தரமேரூா் ம் சாலையில் களக்காட்டூா் கிராமத்தில் விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் 45 நிமிஷங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மாகறல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானப் பேச்சு நடத்தினா்.
மாகறல் காவல் நிலையத்துக்கு வந்து புகாராக எழுதிக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினா் கூறியதை தொடா்ந்து அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.