``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ...
கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரத்தில் செவிலியா்கள், பயிற்சி செவிலியா்கள் பங்கேற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, சங்கரா கண் வங்கி, பன்னாட்டு அரிமா சங்கங்கள் இணைந்து கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலியை நடத்தினா். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே மனிதச்சங்கிலியினை எஸ்.பி. கே.சண்முகம் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் பேருந்து நிலைய போக்குவரத்து சிக்னல் முதல் கச்சபேசுவரா் கோயில் வரை 100-க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியா்கள் கண்தான விழிப்புணா்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிறைவாக மனிதச் சங்கிலியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்வில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ், அகா்வால் கண் மருத்துவமனை நிா்வாகிகள், கண் மருத்துவா்கள், அரிமா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.