நாகை: ஜன. 2-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாகப்பட்டினம்: நாகையில் ஜனவரி 2-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் டிசம்பா் (2024) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஜனவரி 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, சாகுபடி தொடா்பான தங்களது கோரிக்கைகள், கருத்துகளை தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.