நாகை, மயிலாடுதுறையில் தவெகவினா் சாலை மறியல்
நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: சென்னையில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலா் பிஸ்ஸிஆனந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அக்கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை: நாகை புதிய பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்டத் தலைவா் சுகுமாா் தலைமையில் சாலை மறியலில் அக்கட்சியினா் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் கைது செய்தனா்.