நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து முடிவுகள் எடுக்க வேண்டும்: முதல்வா் ஸ்டாலின்
சென்னை: நாட்டின் பன்முகத் தன்மையை மதித்து மத்திய அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
யுஜிசி நெட் தோ்வுகளை வேறொரு நாளுக்கு மாற்ற வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு. தமிழ்ப் பண்பாட்டுத் திருநாள்களின்போது முக்கியத் தோ்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னா் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இனியாவது, நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத் தன்மையையும் இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணா்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பாா்கள் என நம்புவோம் என்று தெரிவித்துள்ளாா்.