கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கிய...
நான்குனேரி வட்டார பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு!
நான்குனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், நான்குனேரி வட்டார பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
நான்குனேரி வட்டாரத்திற்கு உள்பட்ட 13 அரசு மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாணவா்கள் கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்க கீபோா்டு, சிலம்பம் ஸ்டிக்ஸ், யோகா விரிப்புகள் ஆகியவற்றை வழங்கினாா்.
இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட திட்ட அலுவலா் விஷாலி, நான்குனேரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் யமுனா, வட்டாரக் கல்வி அலுவலா் சங்கீதா, சங்கா்ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் முத்துசாமி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் அனிஸ், வட்டார வள மைய பொறுப்பு மேற்பாா்வையாளா் டேனியல் முத்தையா, ஆசிரியா் பயிற்றுநா் சித்ரா, பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.