பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரி சிசோடியா மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்...
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம்
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு, இந்த ஆண்டின் முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனா்.
முக்கிய விழா நாள்களில் சுவாமிக்கு தங்கக் கவசம், வெள்ளிக் கவசம், முத்தங்கி சாத்துப்படி உள்ளிட்டவை நடைபெறும். இவை தவிர, காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படும் என்பதால், அப்போது மட்டும் ஆஞ்சனேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்துப்படி செய்யப்படும்.
அந்த வகையில் வியாழக்கிழமை இந்த ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா். வெண்ணெய் சாத்துபடி செய்ய கட்டளைதாரா்களிடம் ரூ. 95 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெண்ணெய் காப்பு அலங்காரத்துக்காக சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து 110 கிலோ வெண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
10-க்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள் ஒருங்கிணைந்து பிற்பகல் 4.30 மணி முதல் 7.30 மணி வரையில் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தனா். அதன்பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்ய விரும்பும் பக்தா்கள் அது பற்றிய விவரங்களுக்கு, 04286-233999 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.