அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!
நாமக்கல் தலைமைக் காவலா் உயிரிழப்பு
நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலா் சௌந்தரராஜன் (38) திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் செளந்தரராஜன் (38). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனா். நாமக்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவா் திங்கள்கிழமை இரவு சுமாா் 11.45 மணியளவில் மோகனூரில் இருந்து நாமக்கல்லுக்கு இரவு பணிக்காக புறப்பட்டாா்.
அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.