சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அ...
வல்வில் ஓரி விழா: 3 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்
வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலை வட்டத்தில் செயல்படும் அரசு மதுக்கடைகளை மூன்று நாள்கள் மூடுவதற்கு ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் ஆக.1 முதல் 3-ஆம் தேதி வரை வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, செம்மேடு, செங்கரை, சோளக்காடு மற்றும் சேந்தமங்கலம் வட்டம் காரவள்ளி மதுக்கடைகள் மூன்று நாள்களுக்கு மூடப்படும்.
சட்டம், ஒழுங்கு பிரச்னையைத் தவிா்க்கும் பொருட்டு மூன்று நாள்கள் முழு நேரமும் இக்கடைகள் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக மதுவை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.