செய்திகள் :

நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?

post image

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை மதுரையில் இன்று (ஜூலை 10) மாலை ஆடு-மாடுகளின் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,

1. வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006 மேய்ச்சல் சமூக மக்களுக்கு வழங்கியுள்ள வன மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும்.

2. தமிழகம் முழுவதும் உள்ள மேய்ச்சல் தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.

3. கிடை ஆடு, மாடுகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளை ஆவணப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும்.

ஆடு-மாடுகள் மாநாடு
ஆடு-மாடுகள் மாநாடு

4. தமிழ்நாடு முழுவதும் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கிடை ஆடு, கிடை மாடு, எருமை, வாத்து மேய்ப்போருக்காகத் தனியாக, தமிழ்நாடு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (Tamilnadu Pastoral Economic Development Board) அமைத்திட வேண்டும்.

5. நாட்டின ஆடு, மாடுகளைப் பாதுகாக்க அவற்றை வளர்க்கும் மக்களுக்குத் தனியாகச் சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

6. கால்நடைகளுடன் இடம் விட்டு இடம் பெயரும் மக்களின் உரிமைக்கும் உடைமைப் பாதுகாப்பிற்கும் வலசைச் செல்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

7. இடி, மின்னல், புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப்படும் மேய்ச்சல் சமூக மக்கள் மற்றும் அவர்களின் கால்நடைகளுக்குத் தனியாகக் காப்பீட்டுத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

8. சிப்காட் போன்ற திட்டங்களுக்கு மேய்ச்சல் நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

ஆடு-மாடுகள் மாநாடு
ஆடு-மாடுகள் மாநாடு

9. தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டு இயற்கையான மேய்ச்சல் காடுகள் அழிக்கப்பட்டு, 75,000 ஹெக்டேருக்கு அதிகமான வன நிலங்கள் தைல மரம் உள்ளிட்ட வணிக மரங்கள் நடப்பட்டதை மாற்றி மீண்டும் இயற்கை காடுகளை உருவாக்க வேண்டும்.

10. கிடாய் முட்டு, சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு போன்ற கால்நடை சார்ந்த பாரம்பர்ய விளையாட்டுகளைத் தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும்.

11. கால்நடைத் துறை மருந்தகங்களில் தமிழ் கால்நடை மருத்துவம் மற்றும் மருந்துகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12. தமிழ்நாட்டில் அழிந்துவரும் எருமை வளர்ப்பை மீட்டெடுக்க எருமைப் பாலுக்குச் சிறப்புக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

13. மேய்ச்சல் வலசை வழித்தடங்களில் உள்ள நெடுஞ்சாலை, தொடர்வண்டி பாதைகளில் மேய்ச்சலுக்காக சுரங்கப் பாதைகளை உருவாக்கிட வேண்டும்.

ஆடு-மாடுகள் மாநாடு
ஆடு-மாடுகள் மாநாடு

14. மேய்ச்சல் சமூக மக்களுக்கு அரசு தனியாக அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு இலவச காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

15. கால்நடைத்துறையில் மேய்ச்சல் கால்நடைகளுக்கு எனத் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா பேட்டி

'அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என்று எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி கொடுத்ததற்கு பின்னணி அமித் ஷாவின் ஒரு பேட்டி தான்.மத்திய உள்துறை அமைச்சரி அமித் ஷா 'தி நியூ இந்தியன்... மேலும் பார்க்க

"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" - கேரளாவில் அமித் ஷா

கேரள மாநில பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்துவைத்தார். பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில்... மேலும் பார்க்க

லாக்கப் டெத் - குடும்பங்களை சந்திக்கும் விஜய்! - ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க திட்டம்?

'லாக்கப் மரணங்கள்!'கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்.விஜய்சிவகங்கை மடப்புரத்தில் அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்து... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது..."இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டா... மேலும் பார்க்க

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க