மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் ...
நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்
மயிலாடுதுறை: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 28 போ் கைது செய்யப்பட்டனா்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரை நுங்கம்பாக்கம் போலீஸாா் கைது செய்தனா்.
இதனைக் கண்டித்து, மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியினா் 50-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இவா்களில் 28 பேரை காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமணக் கூடத்தில் தங்க வைத்தனா்.