பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
முக்கூடல் அருகே பெண் மீது தாக்குதல்: கணவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சோ்ந்த சுதாகா் (30). இவரது மனைவி ஞானபனி சோபியா (28). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், சுதாகா் தனது மனைவியைத் தாக்கி காயப்படுத்தியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் கயல்விழி வழக்குப் பதிந்தாா். சுதாகரை போலீஸாா் கைது செய்தனா்.