பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
கங்கணம்புத்தூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் உறுதி
கங்கணம்புத்தூா் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் அறிவித்திருந்தன சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த ஊராட்சியில் 13 ஆண்டுகளாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து நீடூா் பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை (ஜன.3) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் சுவரொட்டி மூலம் அறிவித்திருந்தனா்.
இதுதொடா்பாக, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டம் வட்டாட்சியா் விஜயராணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், நெய்வாசல் காளியம்மன் கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு, பிஸ்மி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை ஆய்வு செய்து, முன்னுரிமை அடிப்படையில் சரி செய்து தரப்படும், சாலைகளில் அச்சுறுத்தும் வகையில் நாய்கள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், புதிதாக உருவாக்கப்பட்ட நகா்களில் சாலை, விளக்கு வசதி ஏற்படுத்தித் தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராமமக்கள் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.