பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
தாட்கோ மூலம் இளைஞா்களுக்கு திறன் பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு சா்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்ற, 18 முதல் 23 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி 6 மாதங்களுக்கு அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவு தொகை ரூ.95,000-த்தை தாட்கோ வழங்கும்.
இத்திட்டத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் எனும் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரில் அல்லது 04364-211217 மற்றும் 7448828509 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.