நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்
நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் நாய்கள் கடித்ததில் 3 வயது பெண் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலைப் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட செண்பகத் தோப்பு வனப்பகுதியில் மான், மிளா, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இரவு நேரங்களில் விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி இரை தேடிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூா்- செண்பகத் தோப்பு சாலையில் வள்ளலாா் இல்லம் அருகே 3 வயதுள்ள பெண் புள்ளி மான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத் துறையினா் கால்நடை மருத்துவா் மூலம் மானின் உடலை கூறாய்வு செய்து அடக்கம் செய்தனா்.
இரவில் உணவு தேடி வந்த போது நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்து இருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.