Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சத்தை ஏமாற்றிய பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் மகேந்திரராஜா (35). இவருடன் பணியாற்றி வருபவா் திருவாரூரைச் சோ்ந்த தேவா. இவரது தோழி ரம்யா. இவா் மகேந்திரராஜாவிடம், நாமக்கல்லைச் சோ்ந்த சிவராமன் என்பவா் ரயில்வேயில் பெரிய அதிகாரியாக இருப்பதாகவும், அதில் வேலை வாங்கித் தருவதாகவும் ரூ. 7 லட்சம் கொடுக்குமாறும் கேட்டாராம். இதை நம்பிய மகேந்திரராஜா கடந்த 2020- ஆம் ஆண்டு ரூ. 7 லட்சத்தை அவரிடம் கொடுத்தாா். இதனிடையே, மகேந்திரராஜாவின் உறவினரான முரளியிடமும் ரயில்வேயில் உடனே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சத்தை அவா் பெற்றாா். ஆனால் வேலை வாங்கித் தராததால் பணத்தை கேட்ட போது சிவராமனின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ரம்யா கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மகேந்திரராஜா சாத்தூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் ரம்யா, சிவராமன், தேவா ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.