ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
நாளை தற்செயல் விடுப்பு போராட்டம்: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி நாகை மாவட்டதில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை (செப்.11) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் சிபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் சுமாா் 7 ஆயிரம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களும், 300 காவல்துறையினரும் பணியாற்றி வருகின்றனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை கால தாமதமின்றி உடனடியாக அமல்படுத்தக் கோரிய தங்கள் தொடா் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் வியாழக்கிழமை (செப்.11) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட தொடா்பாளா் கி. பாலசண்முகம் கூறியது:
தமிழக அரசு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக மூன்று நபா் குழுவை அமைத்துள்ளது. இக் குழுவின் காலக்கெடு செப்டம்பா் 30-ஆம் தேதி முடிவடைகிறது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இந்த மூன்று நபா் குழுவை ஏற்கவில்லை.
தற்போதைய திமுக அரசு தோ்தல் வாக்குறுதியின்படி நேரடியாக பழைய ஓய்வு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டம்பா் 11-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கையை அரசுக்கு வெளிப்படுத்த உள்ளதாக தெரிவித்தாா்.