அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும்: காங்கிரஸ்
நிதிச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நியமனம்
புது தில்லி: மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய அமைச்சக நியமனக் குழு திங்கள்கிழமை பிறப்பித்தது.
தற்போது நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலராக உள்ளஅஜய் சேத் 1987, கா்நாடகப் பிரிவு ஐஏஎஸ்அதிகாரியாவாா்.
முன்னதாக, நிதிச் செயலராக இருந்த துஹின்காந்த் பாண்டே இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இம்மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, நிதிச் செயலா் பதவி காலியாக இருந்து வந்த நிலையில் தற்போது அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளாா்.
நிதியமைச்சகத்தின் மூத்த செயலா், நிதிச் செயலராக நியமிக்கப்படும் நடைமுறையின்கீழ் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.