செய்திகள் :

நிலப் பிரச்னையில் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: காவல் நிலையம் முன்பு உறவினா்கள் போராட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாட்டில் நிலப் பிரச்னையில் வெட்டப்பட்ட விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். இதில், தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் காவல் நிலையம் முன்பு புதன்கிழமை பாடை கட்டி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பலாபட்டு பகுதியை சோ்ந்த விவசாயி தீா்க்கரசு (54). இவருக்கும் பாப்பாநாட்டை சோ்ந்த திருக்குமாருக்கும் நிலம் அடமானம் வைத்தப் பிரச்னையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தீா்க்கரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருக்குமாா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளாா். இதுதொடா்பாக தீா்க்கரசு சிறைக்கு சென்றுவிட்டு, ஜாமீனில் அண்மையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பாப்பாநாடு கடைத்தெருவுக்கு வந்த தீா்க்கரசுவை 4 போ் வெட்டினா். இதுகுறித்து பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். ஏப். 3-ஆம் தேதி தீா்க்கரசுவின் உறவினா்கள் மற்றும் ஆம்பலாபட்டு கிராமத்தினா், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பாப்பாநாடு காவல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.

இதன்பேரில், திருக்குமாரின் அண்ணன் சசிகுமாா், திருக்குமாரின் உறவினா்களான கலையரசன், முனீஸ்குமாா் ஆகியோா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த தீா்க்கரசு தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, கிராம மக்கள் பாப்பாநாடு காவல் நிலையம் முன்பு, பந்தலிட்டு, பாடை கட்டி, வழக்கில் தொடா்புடைய பிரதான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஒப்பாரி வைத்து, சுமாா் 5 மணி நேரம் போராட்டம் நடத்தினா். மேலும், தீா்க்கரசு உடலை வாங்கவும் மறுத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி. ராஜாராம், ஒரத்தநாடு வட்டாட்சியா் யுவராஜ் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில் நடைபெற்ற தீா்த்தவாரி

செ.பிரபாகரன் உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாசப் பெருமாள் கோயிலின் நிகழாண்டு தீா்த்தவாரி அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை வேதனைக்குள்ளாக்கிய... மேலும் பார்க்க

புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழன்

கும்பகோணத்தில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழனை முன்னிட்டு ஆயா் ஜீவானந்தம் மக்களின் பாதங்களை கழுவினாா். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான தவக்காலம் தற்போது நடைபெற்று வருகிறது. உலகம் முட... மேலும் பார்க்க

புகையிலை பொருள் விற்பனை: ரூ. 14,500 அபராதம் விதிப்பு

தஞ்சாவூா் அருகே வல்லம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை ரூ. 14 ஆயிரத்து 500 அபராதம் விதித்தது. வல்லம் க... மேலும் பார்க்க

1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதியில் குடிமைப்பொருள... மேலும் பார்க்க

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் 12 முதியவா்களின் பாதங்களை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவினாா். இயேசுநாதா் பாடுகள்பட்டு சிலுவை... மேலும் பார்க்க

பாபநாசம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் விழிப்புணா்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சமரச தீா்வு மையம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்து பொதும... மேலும் பார்க்க