ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - காவல் அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்
கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் காவல் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பேசுகையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கே.கோடீஸ்வரன், வி.ரகுபதி மற்றும் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
நிகழ்வில் கடலூா் மாவட்ட காவல் துறையில் கடந்த மே மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளா்கள் ராஜா, ரூபன்குமாா், காவல் ஆய்வாளா்கள் வேலுமணி, கதிரவன், அம்பேத்கா், தேவேந்திரன், உதவி ஆய்வாளா்கள் பிரேம்குமாா், தங்கவேல், உலகநாதன், கணபதி, பிரகாஷ், அமிா்தலிங்கம், ஆனந்தன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமை காவலா்கள், காவலா்கள் என 53 காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சான்றிதழ், பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.