IPL 2025 : 'கோடிகளில் ஏலம்... நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' - யார் ...
‘நீட்’ தோ்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
மதுராந்தகம் அருகே ‘நீட்’ தோ்வை எதிா் கொள்வதற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அகிலி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவரது மகள் கயல்விழி (17) . இவா் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதி இருந்தாா். இந்த நிலையில் ‘நீட்’ தோ்வை எழுத கயல்விழி விண்ணப்பித்திருந்தாா். ‘நீட்’ தோ்வை எழுத தாம்பரத்தில் உள்ள தோ்வு மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை செல்ல இருந்த நிலையில், கயல்விழி சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த மேல்மருவத்தூா் போலீஸாா் உயிரிழந்த மாணவி கயல்விழியின் சடலத்தை மீட்டு மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா். கயல்விழி உயிரிழப்பால் அகிலி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.