செய்திகள் :

நீட் பயிற்சி அளித்த 40 ஆசிரியா்களுக்கு பாராட்டு

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவா்களுக்கு நீட் பயிற்சி அளித்த 40 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் சா்வதேச அன்னையா் தினத்தை முன்னிட்டு சிறந்த சாதனை புரிந்த அன்னையா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.

மேலும் நிகழ்ச்சியில் மனு அளித்த 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு கீரப்பாக்கம் திட்டப் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவா்களுக்கு நீட் பயிற்சி அளித்த 40 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயணசா்மா, முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், சிறப்பு பள்ளி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள், சிறப்பு அன்னையா்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க நடவடிக்கை: துணைவேந்தா்

சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்து திருக்கு சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல... மேலும் பார்க்க

5 நிமிஷம் சக்ராசனம் செய்து மாணவிகள் சாதனை

நெம்மேலி மீனவா் குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பள்ளி சிறுமிகள் 5 நிமிடம் சக்ராசனம் செய்து சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவா் குடியிருப்பை ... மேலும் பார்க்க

மே 28-இல் கல்லூரிக் கனவு மாரத்தான் போட்டி

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு/நெடுந்தூர ஓட்டம் மாரத்தான் போட்டி 28-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. செங்கல்பட்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் சுங்கச் சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மண்டல, மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பி.நடராஜன், உத... மேலும் பார்க்க

திருப்போரூரில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில... மேலும் பார்க்க

ரூ.10.74 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு

மதுராந்தகம் அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ரூ. 10.74 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி திறப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சாத்தனூரில் குடிநீா் பற்றா... மேலும் பார்க்க