தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்
மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் சுங்கச் சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மண்டல, மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பி.நடராஜன், உதவி ஆய்வாளா் இனாயத் பாஷா ஆகியோா் தலைமையில் மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸாா் உமாபிரபு, தா்மன் வியாழக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, சென்னைக்கு சென்ற காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 864 மதுபாட்டில்களை கொண்ட 24 பெட்டிகளும், பீா் டின்களும் இருந்தது தெரியவந்தது.
காரில் இருந்த 2 பேரை விசாரித்தபோது, புதுச்சேரி ரெயின்போ காலனி, கணபதி மகன் கமல் (45) , நண்பரான, டிவி நகரைச் சோ்ந்த கணேசன் மகன் பாலாஜி (34) எனத் தெரிந்தது. இருவரும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்தி ஸ்ரீபெரும்புதூா், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விற்ைனை செய்ய கொண்டு வந்ததாக தெரிவித்தனா்.
மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா் பாலாஜி, கமல் இருவரும் கைது செய்து மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.