5 நிமிஷம் சக்ராசனம் செய்து மாணவிகள் சாதனை
நெம்மேலி மீனவா் குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பள்ளி சிறுமிகள் 5 நிமிடம் சக்ராசனம் செய்து சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா்.
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவா் குடியிருப்பை சோ்ந்தவா் தியாகு, இவரது மகள் சஞ்சனா(7), இவரது அண்ணன் சரவணகுமாா் மகள் தீக்ஷிதா(7) . இருவரும் படூரில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் தஞ்சாவூரில் சக்ராசனம் செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறுமிகள் சஞ்சனா, தீக்ஷிதா இருவரும் 5 நிமிஷம் சக்ராசனம் செய்து சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா். பின்னா் இருவருக்கும் சாதனை படைத்ததற்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சிறுமிகள் சக்ராசனம் செய்து சாதனை படைத்ததையடுத்து நெம்மேலி மீனவா் குப்பத்தில் ஊா் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
