அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு
நூருல் இஸ்லாம் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை துவக்க விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியானதும், மாணவா்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்து இருந்தனா். அவா்களில் 225 போ் முதல்நாளிலேயே தங்களது சோ்க்கையை உறுதி செய்து பல்கலைக்கழகத்தில் சோ்ந்து கொண்டனா்.
துவக்க விழாவிற்கு பல்கலைக்கழக துணை வேந்தா் டெஸ்ஸி தாமஸ் தலைமை வகித்தாா். சோ்க்கை ஆணைகளை பல்கலைகழக வேந்தா் ஏ.பி.மஜீத் கான் வழங்கினாா். இணை வேந்தா் எம்.எஸ். பைசல் கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.