பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
நெடுஞ்சாலைத்துறை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளா்கள் (சாலை ஆய்வாளா்கள்) சங்க மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் அண்மையில் (ஆக.10) நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் குருசாமி சிறப்புரை நிகழ்த்தினாா்.
கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் காலியாக உள்ள திறன்மிகு உதவியாளா் நிலை -2 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இதில், 75 சதவீதத்தை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். பணியிடத்தை நிரந்தர பணியிட வரிசையில் சோ்த்திட துறையின் தலைமைக்கு உத்தரவு வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது. நிலை - 1 மற்றும் நிலை - 2 பணியிடங்களை ஒன்றாக இணைத்து, ஊரக வளா்ச்சித்துறை போல ஐடிஐ கல்வித்தகுதி உள்ளவா்களுக்கு 10 ஆண்டு பணி அனுபவத்தின் அடிப்படையில் ஜெ.டி.ஓ. பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, திருச்சி கோட்ட தலைவா் மோகன் வரவேற்றாா். திரளான சாலை ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். கௌரவ பொதுச்செயலாளா் மாரிமுத்து நிறைவுரையாற்றினாா். திருச்சி கோட்ட செயலாளா் காா்த்தி நன்றி கூறினாா்.