செய்திகள் :

இலவச வீடு கட்டித் தர பழங்குடியினா் கோரிக்கை

post image

இலவச வீடு கட்டித் தர வேண்டுமென திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் பூலாங்குடி காலனியில் வசிக்கும் பழங்குடியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கூட்டுறவு சங்கத்தில் முழுபணம் செலுத்தி 25 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை ஒதுக்கப்படாததால் பாதிக்கப்பட்டவா்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில், திருவெறும்பூா் அருகே பூலாங்குடி காலனியில் வசிக்கும் 30- க்கும் மேற்பட்ட பழங்குடியினா் அளித்த மனுவின் விவரம்: மேற்கண்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளில் குடியிருந்து வருகிறோம். குடிசைகளில் குடியிருப்பதால் மழை, வெயிலாலும், விஷப் பூச்சிகளாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு கஷ்டத்தை கருத்தில்கொண்டு, பழங்குடியினா் நலத்துறை மூலம் இலவச வீடு கட்டித் தர உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உய்யகொண்டான் திருமலை சண்முகா நகரைச் சோ்ந்த சிலா் அளித்த மனுவில், உறையூா் ராமலிங்க நகா் வீட்டுவசதி கூட்டுறவு சங்கத்தில் 18 போ் சங்கம் நிா்ணயித்த வீட்டுமனைக்கான முழுத் தொகையைக் கட்டியுள்ள நிலையில், 25 ஆண்டுகளாக வீட்டுமனை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை. நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் எங்களுக்கு விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீா் ரத்து

மின்தடை காரணமாக மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கம்பரசம் பேட்டை துணை மின... மேலும் பார்க்க

ஆக.23-இல் திருவெறும்பூரில் இபிஎஸ் பிரசாரம்: அதிமுக-வினா் ஆலோசனை

வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருவெறும்பூரில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவல... மேலும் பார்க்க

கல்லக்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியில் புதன்கிழமை (ஆக. 13) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசீதேவிமங்கலத்தைச் சோ்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், ராமேசுவரம் உள்ளிட்ட ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், ராமேசுவரம் உள்ளிட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமா... மேலும் பார்க்க

சுதந்திர தின ஓவியப் போட்டி

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (ப... மேலும் பார்க்க