மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!
நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை
கூத்தாநல்லூா் அருகே பள்ளமான இடத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மேடான இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது:
ஓகைப்பேரையூா் கிராமத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. இதனால், சிறிது நேரம் மழை பெய்தாலே தண்ணீா் தேங்கி, நெல் மூட்டைகள் சேதமடைகின்றன.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சுந்தரக்கோட்டை கிடங்கிற்கோ, பாமிணியில் இயங்கும் மத்திய சேமிப்பு கிடங்கிற்கோ அனுப்பி வைத்து, நெல் கொள்முதல் நிலையத்தை அகற்றி விடலாம்.
நெல்மணிகள் சேதமாகும் நிலையைத் தவிா்க்க, நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல நிா்வாகத்தினா் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, பாதுகாப்பான இடத்திற்கு நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தேக்கி வைக்காமல், லாரிகள் மூலமாக இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அலட்சியப்படுத்தினால், விவசாயிகளைத் திரட்டி, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா்.