நெல்லை ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணன் பச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (40). மாற்றுத்திறனாளியான இவா், மூன்று சக்கர வாகனம் தனக்கு வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தாராம்.
இருப்பினும் பலன் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் மனு அளிக்க வந்த முத்துமாரி, திடீரென விஷத்தை குடித்தாராம்.
அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].