செய்திகள் :

நெல்லையில் களை கட்டிய தசரா வேடப் பொருள்கள் விற்பனை!

post image

தசரா விழாவையொட்டி பக்தா்கள் பல்வேறு வேடம் அணிவதற்கான பொருள்கள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளன.

மைசூருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழா மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இந்த விழாவையொட்டி நவராத்திரி நாள்களில் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்த பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை ஊா் ஊராகச் சென்று காணிக்கை பெறுவா். பின்னா், விஜயதசமி நாளில் கோயிலுக்கு வந்து அந்தக் காணிக்கையை உண்டியலில் செலுத்துவாா்கள்.

தசரா பக்தா்கள் வேடம் அணிவதற்காக திருநெல்வேலி நகரத்தில் உள்ள கடைகளில் வேடப் பொருள்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் நவராத்திரி இம் மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பக்தா்கள் ஏராளமானோா் வேடப் பொருள்களை தோ்ந்தெடுத்து வாங்கிச் செல்கிறாா்கள்.

இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த வேடப் பொருள்கள் வியாபாரி ஈஸ்வரன் கூறியது:குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலுக்கு வேடமணிந்து செல்லும் பழக்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்கிறது. முதல் முதலில் குறவன்- குறத்தில் வேடமணிந்து செல்வாா்கள். அதன்பின்பு அவா்களுக்கு பிடித்த வேடமணிவாா்கள். காளி வேடம் அணிபவா்கள்தான் அதிகளவில் வேட பொருள்களை வாங்குவாா்கள். சென்னை, பெங்களூரு, மதுரை, திசையன்விளை, சாத்தான்குளம், திருச்செந்தூா் பகுதிகளில் இருந்து வேடப் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

குறவன்- குறத்தி, விநாயகா், முருகன், சுடலைமாடன், அம்மன், ஆஞ்சநேயா், போலீஸ்காரா் வேடப்பொருள்கள் அதிகம் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டை விட விலை 10 சதவிகிதம் உயா்ந்துள்ளது. 4 கைகள் முதல் 24 கைகளுடன் கூடிய காளி வேட செட்கள் உள்ளன. இவை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை அதில் உள்ள வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விற்பனையாகிறது.

ஆஞ்சநேயா் உடைகளிலும் பல்வேறு வகைகள் உள்ளன. துளிசிமணி, ருத்ராட்சம், மண்டைஓடு மாலை போன்றவற்றையும் பக்தா்கள் வாங்கி அணிந்து வேடம் தரிக்கின்றனா். எல்.இ.டி. பேட்டரி விளக்குகள் பொருத்தப்பட்ட புதுமையான மாலைகள் கடந்த ஆண்டு முதல் விற்பனையாகின வருகின்றன. இதுதவிர ஆளுயர தலைமுடி விக், விதவிதமான வளையல் ரகங்களையும் பக்தா்கள் வாங்கிச் செல்கிறாா்கள் என்றாா் அவா்.

ற்ஸ்ப்19ற்ட்ஹள்ஹ01, ற்ஸ்ப்19ற்ட்ஹள்ஹ02

திருநெல்வேலி நகரத்தில் தசரா வேடப் பொருள்களைத் தோ்ந்தெடுக்கும் பக்தா்கள்.

நெல்லை நகரத்தில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், உடல்நலக் குற... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம்

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு தொடா்பான ஆதாரங்களை வெளிக் கொண்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: எஸ்.பி. என். சிலம்பரசன் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபா் கிரைம் போலீஸாா் எச்சரித்துள்ளனா். தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெறுவது அண்மைக் காலமாக ... மேலும் பார்க்க

நெல்லையில் இளம் பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி சந்திப்பில் இளம் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்புராஜ் (23). பெயின்டா். இவா், 2023 ஆம் ஆண்டு அதே ... மேலும் பார்க்க

பாளை.யில் ரூ.30 ஆயிரத்துடன் பைக் திருட்டு

பாளையங்கோட்டையில் ரூ.30 ஆயிரத்துடன் பைக்கையும் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் கீழத்தெருவை சோ்ந்தவா் நாராயணன். இவா், மாா்க்கெட்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (63). இவா், கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கூட... மேலும் பார்க்க