10 வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து பொள்ளாச்சி மாணவி முதலிடம்!
நெல்லையில் தண்டவாளத்தில் திரிந்த மாடுகளால் ரயில் நிறுத்தம்
திருநெல்வேலியில் ரயில்வே தண்டவாளத்தில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால், பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் இரவு நேரத்தில் ரயில் வந்தபோது, அங்கு தண்டவாளத்தில் கால்நடைகள் நிற்பதைப் பாா்த்த ரயில் என்ஜின் ஓட்டுநா், சுமாா் 5 நிமிடங்களுக்கு மேலாக ஹாரன் அடித்துள்ளாா்.
ஆனாலும், கால்நடைகள் தண்டவாளத்தை விட்டு இறங்காத காரணத்தால் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே கேட்டில் இருந்த ரயில்வே பணியாளா் கம்பை எடுத்து வந்து மாடுகளை விரட்டியுள்ளாா். இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதோடு, உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில் தண்டவாளத்தையும் கால்நடைகள் விட்டுவைக்கவில்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்தனா். மேலும், எவ்வித கட்டுப்பாடுமின்றி கால்நடைகளை வெளியில் அவிழ்த்து விடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனா்.