செய்திகள் :

நெல்லையில் பெட்ரோல் குண்டுகள் வீசியவா்களை பிடிக்க 7 தனிப்படை

post image

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடா்பாக திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

அதேபோல கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளா் செல்வசங்கா்(45) வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக முன்னீா்பள்ளம் போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

முதல் கட்ட விசாரணையில் இந்த இருசம்பவங்களிலும் ஈடுபட்டது மேலநத்தம், பொன்னாக்குடி, முன்னீா்பள்ளத்தை சோ்ந்த 4 போ் என்பது தெரியவந்தது.

இந்த 2 சம்பவங்களை நிகழ்த்துவதுக்கு முன்பாக ஏா்வாடி அருகே தளபதிசமுத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரத்தை இவா்கள் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த 4 பேரையும் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமையில் 3 தனிப்படைகளும், நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா், சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் ஆகியோா் தலைமையில் தலா 1 தனிப்படையும், திருநெல்வேலி மாநகரில் மாநகர துணை காவல் ஆணையா்(மேற்கு) வி.கீதா மேற்பாா்வையில் 2 தனிப்படையும் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பள்ளி வாகனங்கள் முதல் ஆய்விலேயே அவசரக் கதவு திறக்கவில்லை: அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்ட பள்ளி வாகனங்களை ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தபோது, முதல் வாகனத்திலேயே அவசர கதவு திறக்காததால் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தாா். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியா... மேலும் பார்க்க

தெற்குப் பாப்பான்குளம் முருகன் கோயிலில் கரடி நடமாட்டம்

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்குப்பாப்பான்குளம் மயிலாடும்பாறை முருகன் கோயிலில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வண்ணாா்பேட்டை பேராச்சி அம்மன் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா். ஆற்றின் ஆழமான பகுதிக்... மேலும் பார்க்க

நெல்லையில் தண்டவாளத்தில் திரிந்த மாடுகளால் ரயில் நிறுத்தம்

திருநெல்வேலியில் ரயில்வே தண்டவாளத்தில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால், பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்க... மேலும் பார்க்க

நான்குனேரி ஜமாபந்தியில் குவிந்த மனுக்கள்

நான்குனேரி வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் ஏராளமானோா் பட்டா பெயா்மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித... மேலும் பார்க்க

வி.கே.புரம் அருகே வீட்டை விற்பதாக ரூ. 4 லட்சம் மோசடி: தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளம் பிள்ளையாா் கோயில்... மேலும் பார்க்க