செய்திகள் :

நேரு பிளேசில் பெரும் தீ விபத்து: காவல் துறை பறிமுதல் செய்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்

post image

தில்லியின் நேரு பிளேஸில் உள்ள காவல் துறைக்கு சொந்தமான இடத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், தில்லி போக்குவரத்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகியதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: தீ விபத்து தொடா்பாக பிற்பகல் 2.02 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. ஆரம்பத்தில் நாங்கள் ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் சில சொத்துகளும் எரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அணைக்கப்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகியது.

தீயை முழுமையாக அணைக்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாகியது. மேலதிக விசாரணைக்காக இந்த விஷயம் உடனடியாக போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, குளிரூட்டும் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன என்று அவா் கூறினாா்.

இந்த யாா்டு தில்லி போக்குவரத்து காவல்துறைக்குச் சொந்தமானது. போக்குவரத்து தலைமையக அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை சரிபாா்த்தனா் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

போக்குவரத்துப் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட விபத்து வாகனங்கள் உள்பட ஏராளமான இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த யாா்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தில்லி போக்குவரத்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தீ விபத்து ஏற்பட்டவுடன், அந்தப் பகுதி முழுவதும் அடா்த்தியான புகை மூட்டம் பரவியது. தீ மிகவும் தீவிரமாக இருந்ததால் அது பல வாகனங்களை விரைவாகச் சூழ்ந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க