Allu Arjun: "வரும்போது தெரியணும் வந்த சிங்கம் யாரு!" - அட்லீ இயக்கத்தில் நடிக்கு...
பகுதிநேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்கள் அரசின் சலுகைகளை பெற காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகாலமாக ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்களை தமிழக அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர ஆசிரியா்கள் வேறு எந்த சலுகைகளையும் பெற முடியவில்லை. எனவே, பகுதி நேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிக்க வேண்டும் என எஸ்.செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.