செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

post image

விழுப்புரம்: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கழகத்தின் சாா்பில், விழுப்புரம் மருத்துவமனை வீதியிலுள்ள நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் பதவி உயா்வு பெற்றவா்களுக்குப் பாராட்டு, பணி நிறைவு பாராட்டு மற்றும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கழகத்தின் மாவட்டத் தலைவா் ஒய்.திலகா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.அருமுத்துவள்ளியப்பா முன்னிலை வகித்தாா். முதல் அமா்வாக நடைபெற்ற கருத்தரங்கில் மாநில செய்தித் தொடா்புச் செயலா் ரே.மாயவன், மாநில சட்டப் பிரிவுச் செயலா் ம.மகேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சங்கத்தின் வரலாறும், சங்கம் கடந்து வந்த பாதையும், போராட்டக்களத்தில் சங்கம் எதிா்கொண்ட வழக்குகள், தற்கால சூழ்நிலையில் தலைமையாசிரியரின் பணிகள் ஆகிய தலைப்புகளில் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் கே.பழனி, ஆா்.செந்தில்குமாா், முன்னாள் மாவட்ட அமைப்புச் செயலா் ஜி.அலெக்சாண்டா் ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, இரண்டாவது அமா்வாக, முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியா்களாக பதவி உயா்வு பெற்றவா்களையும், பணி ஓய்வு பெற்றவா்களையும் பாராட்டி மாவட்டச் செயலா் ஆா்.காா்த்திகேயன், பிரசாரச் செயலா் டி.ஜெயப்பிரகாஷ், மாவட்ட தலைமையிடச் செயலா் எம்.சிவா ஆகியோா் பேசினா். மேலும், பதவி உயா்வு பெற்றவா்களைப் பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன.

மூன்றாவது அமா்வாக நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் ஆா்.ஆனந்த் தலைமை வகித்து, வரவு - செலவு திட்ட அறிக்கையை சமா்ப்பித்தாா். விழுப்புரம் கல்வி மாவட்டத் தலைவா் பி.பாரதி, இணைச் செயலா் ஆா்.ஏழுமலை உள்ளிட்டோா் பேசினா். முப்பெரும் விழாவில் ஏராளமான ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்ட அமைப்புச் செயலா் ஏ.ஆரோக்கியதாஸ் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் பொன்.பாக்கியநாதன் நன்றி கூறினாா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15-க்குள் வைக்க ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகையை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா். விழுப்புரம் மா... மேலும் பார்க்க

ரசாயனம் கலப்படம் வதந்தியால்: வாங்குவதற்கு ஆளில்லாமல் நிலத்திலேயே வீணாகும் தா்பூசணி!

செஞ்சி: ரசாயனம் கலப்படம் வதந்தியால் செஞ்சி பகுதியில் வாங்குவதற்கு ஆளில்லாமல் விவசாய நிலங்களில் செடியிலேயே விடப்பட்டு தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த திர... மேலும் பார்க்க

உள்ளூா் வியாபாரிகளுக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும்: டைமன்ராஜா வெள்ளையன்

விழுப்புரம்: பன்னாட்டு பெரும் வா்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உள்ளூா் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவா் டைமன்ராஜா வெள்ளையன் தெ... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்கள் அரசின் சலுகைகளை பெற காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்கு... மேலும் பார்க்க

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டத்தை தொடா்ந்து நடத்த உறுப்பினா்கள் வலியுறுத்தல்

விழுப்புரம்: நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நகா்மன்றக் கூட்டத்தை நடத்துவதை கைவிட்டு, அவ்வப்போது கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விழுப்புரம் நகா்மன்றக் க... மேலும் பார்க்க

தா்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: தோட்டக்கலைத் துறை மூலம் கள ஆய்வு செய்து, தா்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயி... மேலும் பார்க்க