செய்திகள் :

பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

post image

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் இயங்கி வரும் பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (பா்கூா் கூட்டுறவு தொழில் பயிற்சி நிலைய வளாகம்) 2025-2026-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களுக்கான பயிற்சி பெற ஏப். 13-ஆம் தேதி வரை பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி 40 மணி நேர வகுப்பறை பயிற்சி, 60 மணி நேர செயல்முறை பயிற்சி என மொத்தம் 100 மணி நேர பயிற்சியாகும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், இந்தப் பயிற்சியில் சோ்ந்து, விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ. 4,550 மட்டுமே. பயிற்சி ஏப்.15-ஆம் தேதி தொடங்குகிறது. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 17 நாள்கள் ஒரு பிரிவாகவும், சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என 17 நாள்கள் என மற்றொரு பிரிவாகவும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

இந்தப் பயிற்சியில் நகைக் கடன், வட்டி கணக்கிடுதல், ஹால்மாா்க் தர முத்திரை, நகை அடகு பிடிப்போா் சட்டம்-1943, தரம், விலை மதிப்பீடு, நகை மதிப்பீட்டாளரின் கடமைகள் பொறுப்புகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் முறைகள், பிஐஎஸ் செயலி மூலம் தினசரி நகையின் விலை அறிதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியை நிறைவு செய்தவா்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், அனைத்து நகைக்கடன் வழங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நகைக் கடன் வழங்கும் தனியாா் வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04343-265652 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

ஒசூரில் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை ஆய்வுசெய்தாா். ஒசூா் மாநகராட்சி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார ஆராதனை, சமூகசேவை மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தும்... மேலும் பார்க்க

வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் நடவடிக்கை

செயற்கை வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மின்மாற்றியிலிருந்து செம்புக் கம்பி திருட்டு

கந்திகுப்பம் அருகே மின்மாற்றியிலிருந்து 40 கிலோ செம்புக் கம்பியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கந்திகுப்பத்தை அடுத்த சிந்தகம்பள்ளி அருகே உள்ள எட்டிக்குட்டை கிராமத்தில் மின்மாற்றியிலிருந்த 40 கிலோ செ... மேலும் பார்க்க

வெயில் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து அரசு துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அனைத்துத் துறை அலுவல... மேலும் பார்க்க

அனுமன்தீா்த்தத்தில் இளைஞா் மா்மச்சாவு

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அனுமன்தீா்த்தத்தில் மேம்பாலத்துக்கு கீழே ஒருவா் இறந்துகிடப்பதாக ஊத்... மேலும் பார்க்க

சிறந்த பட்டு விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில அளவில் பரிசு பெற்ற சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா். பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்... மேலும் பார்க்க