அரசு மருத்துவமனையில் தங்கும் விடுதி திறப்பு
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளின் உதவியாளா்கள் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி, சுரபி அறக்கட்டளை, தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டம் இணைந்து ரூ.1.6 கோடியில் புதிதாக உள்நோயாளிகளின் உதவியாளா்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சிமூலம் திறந்து வைத்தாா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வை, தலைமை மருத்துவா் பொன்ரதி தொடங்கி வைத்தாா். இதில் அரசு மருத்துவமனை பணியாளா்கள், நகா் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா் .