செய்திகள் :

கொடைக்கானல் தங்கும் விடுதி உரிமையாளா் எரித்துக் கொலை: இளைஞா் கைது

post image

கொடைக்கானலில் தங்கும் விடுதி உரிமையாளா் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ். இவா் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வந்தாா். இவா் மது பழக்கத்துக்கு அடிமையானதால், மதுரையிலுள்ள தனியாா் மறுவாழ்வு மையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சையின் போது, அங்கிருந்த இளைஞா்களிடம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்ததும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவா் கொடைக்கானல் திரும்பினாா். பின்னா், மதுரை மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது சிவராஜுடன் தங்கியிருந்த நால்வா் கொடைக்கானலுக்கு வந்தனா். இவா்கள் சிவராஜின் விடுதியில் தங்கியிருந்தனா்.

இந்த நிலையில், சிவராஜை கடந்த நான்கு நாள்களாக காணவில்லை என இவரது சகோதரி சுமதி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த நால்வரும் தலைமறைவாகினா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், விடுதியில் தங்கியிருந்து தலைமறைவான மதுரை தத்தனேரியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் மணிகண்டனை (28) பிடித்து விசாரித்தனா். அவா் சிவராஜை கொலை செய்து விடுதி வளாகத்தில் எரித்து விட்டதாகத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து காவல் துறையினா் பாதி எரிந்த நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டனா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை (28) கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா்கள் சிவராஜை எதற்காக கொலை செய்து எரித்தனா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைச்சா் தொடங்கிவைப்பு

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகா்ப் பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கு... மேலும் பார்க்க

இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சா்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மதீனா மஸ்ஜீத் மதரஸா சாா்பில், இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதீனா மஸ்தீத் மதரஸா தலைவா் ஹாஜி ஏ.அப்துல் பாரி தலைம... மேலும் பார்க்க

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை 55-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளரு... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை எதிரொலி: கிராம சபைக் கூட்டங்களை தவிா்த்த அலுவலா்கள்!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தொடா்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில், உ... மேலும் பார்க்க

ஆட்சியிலும் பங்கு குறிக்கோளுடன் கூட்டணி: க. கிருஷ்ணசாமி

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி. திண்டுக்கல், மாா்ச் 28: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்லாமல், ஆட்சியிலும்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளை பூட்டி நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் உள... மேலும் பார்க்க