மின்மாற்றியிலிருந்து செம்புக் கம்பி திருட்டு
கந்திகுப்பம் அருகே மின்மாற்றியிலிருந்து 40 கிலோ செம்புக் கம்பியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கந்திகுப்பத்தை அடுத்த சிந்தகம்பள்ளி அருகே உள்ள எட்டிக்குட்டை கிராமத்தில் மின்மாற்றியிலிருந்த 40 கிலோ செம்புக் கம்பியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா். இதன் மதிப்பு ரூ. 35 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து வரட்டனப்பள்ளி தாண்டவன்பள்ளம் மின்வாரிய இளநிலை பொறியாளா் சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.