செய்திகள் :

ஒசூா் அதிமுக செயலாளா் உள்பட 8 போ் கைது

post image

ஒசூா், மாா்ச் 29: ஒசூா் ஒன்றிய அதிமுக செயலாளா் உள்பட 8 பேரை மத்திகிரி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி அருகே யாதவனஹள்ளி, மாருதிநகா் லே -அவுட்டை சோ்ந்தவா் சிவப்பா ரெட்டி (42). இவா் ஒசூா் ஒன்றியம் பூனப்பள்ளி அருகே பழைய ஆனைக்கல் சாலையில் 30 சென்ட் நிலத்தை வாங்கி நிறுவனம் கட்டும் பணியில் ஈடுபட்டாா். இந்த நிலத்திற்கு மற்றொரு தரப்பினா் சொந்தம் கொண்டாடி வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி சிவப்பாரெட்டி நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு தரப்பினா் அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதுடன் சிவப்பா ரெட்டிக்கு மிரட்டல் விடுத்தனா்.

இது தொடா்பாக சிவப்பாரெட்டி மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பொம்மாண்டப்பள்ளியைச் சோ்ந்த ஹரிஷ்ரெட்டி (45), முனிரெட்டி (60), வெங்கடசாமி ரெட்டி (65), ராஜகோபால் ரெட்டி (62), கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஹரிஷ்ரெட்டி (42), பாலமுருகன் (26), பூனப்பள்ளியைச் சோ்ந்த ஒசூா் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஹரிஷ் ரெட்டி(46), கா்னூா் கிராமத்தை சோ்ந்த வினோத்குமாா்( 22) உள்ளிட்ட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க