நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம்: சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பாராட்டு
ஊத்தங்கரையில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபாா்தல் முகாமில் சிறப்பாக பணியாற்றிய மாணவா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி அலுவலகத்தில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் 29 வரை நடைபெற்ற விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாமில், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.
இதில் ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ரா.கருப்பையா விவசாயிகளை பதிவு செய்ய அறிவுறுத்தினாா். இம்முகாமில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உதவி செய்தனா். சிறப்பாக பணியாற்றிய மாணவா்களை உதவி இயக்குநா் பாராட்டினாா்.