Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்கா ரூ.3.24 கோடியில் அபிவிருத்தி பணி
ஒசூரில் ரூ. 3.24 கோடியில் ராமநாயக்கன் ஏரி பூங்கா அபிவிருத்தி பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் மாநகராட்சியில்,
உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ், மாநகராட்சி 34ஆவது வாா்டு ராமநாயக்கன் ஏரி அரசு பூங்கா வளாகத்தில் ரூ. 3 கோடியே 24 லட்சம் மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை பூமி பூஜை செய்து சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் சி.ஆனந்தய்யா, மண்டலக் குழுத் தலைவா் ரவி, மாமன்ற உறுப்பினா் நரேஷ், வாா்டு செயலாளா் மாதேஷ், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வனவேந்தன், மாநகராட்சி அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.