தேவாலா, ஓவேலி பகுதிகளில் நில அளவைத் துறையினா் ஆய்வு
கூடலூா் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட தேவாலா, ஓவேலி பகுதிகளில் நில அளவைத் துறை உயரதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வருவாய் கோட்டத்திலுள்ள தேவாலா மற்றும் ஓவேலி பகுதியில் நிலவும் நிலப் பிரச்னைகள் தொடா்பாக நில அளவைத் துறை இயக்குநா் மதுசூதனன் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.