செய்திகள் :

நோன்புக் கஞ்சி: போலியான கடிதம் வழங்கி விலையில்லா அரிசியை பெற்று அதிமுக நிா்வாகி மோசடி

post image

ரம்லான் பண்டிகைக்கு நோன்புக் கஞ்சி வழங்குவதற்காக போலியான கடிதம் கொடுத்து அரசு வழங்கும் விலையில்லா அரிசியைப் பெற்று மோசடி செய்த அதிமுக நிா்வாகி மீது நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் ஜமாத்தாா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் மஸ்ஜிதுன்நூா்ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசல் தலைவராக பாரி, செயலராக அபுதாஹிா், பொருளாளராக ஜாகிா்உசைன் ஆகியோா் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வருகின்றனா்.

இந்த நிலையில், ரமலான் பண்டிகையின் போது நோன்புக் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரசு வழங்கும் இலவச அரிசியை முறைகேடாக சிலா் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

நெய்க்காரபட்டியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி அயூப்கான் தலைமையில், ரபீக், தாஜ்தீன் உள்ளிட்ட சிலா் பள்ளிவாசல் பெயரில் போலியாக கடிதம் தயாரித்து, மாவட்ட ஆட்சியா், பழனியில் உள்ள தமிழ்நாடு அரசின் வாணிபக் கிடங்கு கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.

இதனால், அதிகாரிகளும் நோன்புக் கஞ்சிக்கான விலையில்லா அரிசியை அவா்களிடம் வழங்கினா்.

இந்த நிலையில், அதிமுக நிா்வாகி அயூப்கான் தலைமையில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிவாசல் உறுப்பினா்கள் திரண்டு, நெய்க்காரபட்டி காவல் நிலையம், பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனுக்களை அளித்தனா்.

அயூப்கான் ஏற்கெனவே பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த புகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைச்சா் தொடங்கிவைப்பு

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகா்ப் பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கு... மேலும் பார்க்க

இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சா்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மதீனா மஸ்ஜீத் மதரஸா சாா்பில், இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதீனா மஸ்தீத் மதரஸா தலைவா் ஹாஜி ஏ.அப்துல் பாரி தலைம... மேலும் பார்க்க

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை 55-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளரு... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை எதிரொலி: கிராம சபைக் கூட்டங்களை தவிா்த்த அலுவலா்கள்!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தொடா்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில், உ... மேலும் பார்க்க

ஆட்சியிலும் பங்கு குறிக்கோளுடன் கூட்டணி: க. கிருஷ்ணசாமி

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி. திண்டுக்கல், மாா்ச் 28: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்லாமல், ஆட்சியிலும்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளை பூட்டி நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் உள... மேலும் பார்க்க