அனுமன்தீா்த்தத்தில் இளைஞா் மா்மச்சாவு
ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அனுமன்தீா்த்தத்தில் மேம்பாலத்துக்கு கீழே ஒருவா் இறந்துகிடப்பதாக ஊத்தங்கரை போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்தவா் தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சோ்ந்த சந்திரன்-கோவிந்தம்மாள் தம்பதியின் மகன் சஞ்சய் (22) என்ற அஞ்சலி என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாக இருந்து ஆணாக மாறிய இவா் வீட்டைவிட்டு வெளியேறி ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருந்தாா் என்பதும் தெரியவந்தது.
ஆடைகள் கலைந்த நிலையில் கிடந்த இவரது சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.