இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
பக்த ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு!
திருவெறும்பூா் ரயில் நிலைய ஸ்ரீ பக்த ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவெறும்பூா் ரயில் நிலையம் செல்லும் வழியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் அண்மையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக, கடந்த ஜன. 31 ஆம் தேதி மங்கல இசை, சுதா்சன ஹோமம், சுத்த ஹோமம் உள்ளிட்ட வேத மந்திரங்கள் முழங்க விழா தொடங்கியது. பிறகு வேங்கூா் பூசத்துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்துவரப்பட்டு, முதல் கால யாகசாலை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, சனிக்கிழமை மூன்றாம் மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கால யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு நடந்தது
விழாவில் திருவெறும்பூா் எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானமும், ட்ரோன் மூலம் புனித நீரும் தெளிக்கப்பட்டது.