செய்திகள் :

‘பசுமை விகடனைப் படித்தேன்.. எங்கள் கிராமத்தையே பசுமையாக மாற்றினேன்'

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

உங்கள் பசுமை விகடன் இதழ் 19-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பசுமைப் பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.

கடந்த 18 ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறது, ‘படிச்சோம் விதைச்சோம்’ என்ற விவசாயிகளின் அனுபவங்கள்.

‘‘பொது இடங்கள்ல மரக்கன்றுகள் நடக்கூடிய சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்த என்னை, ஓர் இயற்கை விவசாயியாகவும் மாத்தியது, ‘பசுமை விகடன்’தான்’’ என்று சிலாகித்துப் பேசியிருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் விஸ்வநாதன்.

அடுத்து சொல்லியிருப்பவரின் அனுபவம் வேறுவகை.

‘‘எங்க ஊர் தேநீர்க்கடையில விற்பனைக்காக, தொங்கவிடப்பட்டிருந்த பசுமை விகடன் என் கண்ல பட்டுச்சு. என்னதான் போட்டுருக்குனு பார்க்கலாமேனு யதேச்சையா வாங்கிப் படிச்சு பார்த்தேன். இயற்கை விவசாயம் பத்தி நம்மாழ்வார் ஐயா சொன்ன கருத்துகள் என் மனசுல ஈர்ப்பை ஏற்படுத்த ஆரம்பிச்சது. தொடர்ச்சியா பசுமை விகடன் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன்’’ என்று பகிர்ந்துள்ளார் திருவாரூர் மாவட்டத்தில் பலவிதமான காய்கறிகள் பயிரிட்டு வரும் ராஜராஜன்.

பசுமை விகடன் வாசிப்பு மூலம் ஓர் ஊராட்சியைப் பசுமையாக மாற்றிக் காட்டியுள்ளார், திருவள்ளூர் மாவட்டம், மோரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திவாகரன். இன்னும் இன்னும் பலரின் பயனுள்ள அனுபவங்கள் இதழில் இடம் பெற்றுள்ளன.

இவற்றுக்கு முத்தாய்ப்பாக, ‘‘இப்போது எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும், அங்குள்ள விவசாயிகள் இடம் தருகிறார்கள், உணவுச் செலவை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் பல உதவிகளைச் செய்ய முன்வருகிறார்கள். எங்களுடைய உடல் உழைப்பு மற்றும் நிதிச்சுமையைக் குறைத்துவிடுகிறார்கள்.

மேலும், பல பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளே ‘விதைத் திருவிழா’ நடத்தத் தொடங்கியுள்ளார்கள். ஆக, விதைத் திருவிழா மக்கள் இயக்கமாக மாறியுள்ளது’’ என்று கள நிலவரத்தையும் அதற்கான காரணத்தையும் அடுக்கியுள்ளார் கிரியேட் அமைப்பைச் சேர்ந்த முனைவர் துரைசிங்கம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பசுமை விகடன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், வாசகர்கள், படைப்பாளிகள், கட்டுரையாளர்கள், செயற்பாட்டாளர்கள், விஞ்ஞானிகள், வேளாண், கால்நடை கல்வி நிறுவனத்தினர், அரசாங்கத்தின் பல்வேறு துறையினர், விளம்பரதாரர்கள், விகடன் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம். என்றென்றும் இணைந்தே இருப்போம்... ஓர் இயக்கமாக!

பருவம் தவறிய மழை; மீண்டும் முளைத்த நெற்பயிர்கள்; நிவாரணம் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம்காரணமாகக்குளங்கள், கண்மாய்களில் வழக்கத்தை விட நீர் இருப்பு அதிகமாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் பல லட்சம் ஏக்கரில் ந... மேலும் பார்க்க

முருங்கையில் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்... முருங்கை சாகுபடி செய்வது எப்படி? வழிகாட்டும் பயிற்சி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இயங்கி வரும் தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (EDII) மற்றும் பசுமை விகடன் இணைந்து நடத்தும் "லாபம் கொடுக்கும் முருங்கை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டல்" என்ற தலைப... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கா.ராஜேந்திரன்,பேரையூர்,மதுரை. 80986 92026 முருங்கை விதை (பி.கே.எம்.1), முருங்கை எண்ணெய், வேலி மசால் விதை (கோ.2).கே.ஜெயமணி,செங்கமடை,ராமநாதபுரம். 97910 36746 வியட்நாம் கறுப்புக் கவு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”3 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடியில் 154 பேர் மட்டும் இயற்கை விவசாயம்” - கலெக்டர் ஆதங்கம்

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்), பெங்களூரு மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண் மையம், தமிழ்நாடு அரசு விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்... மேலும் பார்க்க

”மழை, பனியால் பாதிக்கப்படும் நெல், ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தபடுமா?”- மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்ததில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நெ... மேலும் பார்க்க

முருங்கை பவுடர், கேப்சூல்,தேநீர்; லாபத்துக்கு வழிகாட்டும் முருங்கை சாகுபடி, மதிப்புக்கூட்டல் பயிற்சி

மதிப்புக்கூட்டல் என்பது விவசாயத்தின் ஓர் அம்சமாக இருந்துவருகிறது. காரணம், மதிப்புக்கூட்டினால் அந்தப் பொருளின் வாழ்நாள் அதிகம், கூடுதல் விலைக்கு விற்கலாம், விளைபொருள்களின் சேதத்தைக் குறைக்கலாம் எனப் பல... மேலும் பார்க்க